இலங்கை பல்கலைக்கழகங்களை உலகத் தரப்படுத்தல் சுட்டிகளுக்கு மேம்படுத்தல் மற்றும் சர்வதேசமயப்படுத்துவதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்களை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி பின்வரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் சீனக் குடியரசினுடைய சீன விஞ்ஞானக் கல்வி நிறுவகத்தின் கீழுள்ள புவியியல் மற்றும் புவி இயற்பியலுக்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இலங்கை களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- இலங்கை மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் யொகோஹோமா தேசிய பல்கலைக்கழகத்தின் பல்புலமை விஞ்ஞான நிறுவகத்திற்குமிடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் டொகுயாமா பல்கலைக்கழகத்தின் தேசிய தொழிநுட்ப நிறுவகத்திற்ம் இடையில் 05 வருடங்களுக்கு செல்லுபடியாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

0 Comments