அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு அமைவாக அரச துறையில் இதுவரை பெண்களை ஆட்சேர்ப்புச் செய்யாத பதவிகளுக்குப் பெண்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்திற் கொண்டு, தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளில் பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஏற்பாடுகள் இன்மையால், அரசியலமைப்பின் 55 உறுப்புரையின் (1) உப அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய அமைச்சரவைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கிணங்க புகையிரத இயந்திர சாரதிகள், புகையிரத பாதுகாப்பு அதிகாரி, புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் புகையிரத மேற்பார்வை முகாமையாளர் போன்ற பதவிகளுக்கு பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Comments