இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விண்ட்சர் கோட்டையில் இளவரசி அன்னேயிடம் இருந்து உயரிய விருதை பெற்றார்.
பிரித்தானியாவில் இவ்வருடத்தின் தொடக்கத்தில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கின் ராஜினாமா கௌரவப் பட்டியலில் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்தார்.
இந்நிலையில், விண்ட்சர் கோட்டையில் இளவரசி அன்னேயிடமிருந்து Knighthood எனும் விருதை ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) பெற்றார்.
43 வயதாகும் ஆண்டர்சன், இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விவிருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்திருந்தார்.
இளவரசி அன்னேயிடமிருந்து விருதை பெற்றதால் ஆண்டர்சனுக்கு ஒரு சிறப்பான நாள் இது என்று லன்காஷயர் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளது.
அத்தோடு, ஜேம்ஸ் ஆண்டர்சன் லான்காஷயருடன் 01 வருட ஒப்பந்த நீட்டிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments