தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள சொரணதொட்டை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 08 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும், எதிர்க்கட்சியின் 03 உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் 04 உறுப்பினர்களும், சபை தலைவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இச்சபையில் எதிர்க்கட்சிக்கு 10 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் 05 உறுப்பினர்களும் இருந்த போதிலும், தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது எதிர்க்கட்சியின் 02 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால், தலைவர் தேசிய மக்கள் சக்தி கட்சியால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments