Ticker

10/recent/ticker-posts

கிண்ணியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) வசமுள்ள கிண்ணியா பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 12 மேலதிக வாக்குகளால் இன்று செவ்வாய்க்கிழமை (25) நிறைவேற்றப்பட்டுள்ளது.

​பிரதேச சபைத் தவிசாளர் A. R. M. அஸ்மி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), தேசிய முன்னணி நல்லாட்சிக்கான (NFGG), மற்றும் தேசிய காங்கிரஸ் (NC) உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

​கிண்ணியா பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்கள் 14 பேரும் இன்றைய (25) சபை அமர்வில் பங்கேற்றனர்.

​தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் அங்கம் வகித்த இரண்டு உறுப்பினர்களில், ஒருவர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார். மற்றொரு உறுப்பினர், வாக்கெடுப்பு நடைபெறும் போது சபையை விட்டு வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

​இந்த வெற்றியானது, அடுத்த வருடத்திற்கான அபிவிருத்தி மற்றும் நிதி நிர்வாகத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தினை கிண்ணியா பிரதேச சபைக்கு வழங்கியுள்ளது.



Post a Comment

0 Comments