இந்தியாவின் பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், பைதாபூர் பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, திருமணத்திற்காக மணமகனும் அவருடைய, குடும்பத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேற்கு சாம்பரானுக்கு சென்றிருந்தனர்.
தொடர்ந்து திருமணச் சடங்குகள் நடைபெற்ற நிலையில் மணமகன் வெகு நேரமாக மூக்கு கண்ணாடி அணிந்திருந்ததை மணமகள் கவனித்துள்ளார். இத்தனையடுத்து, அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும், உடனடியாக அதனை வெளிக்காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணச் சடங்குகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மணமகன் கண்ணாடியை கழற்றிய வேளையில் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது.
அத்தருணத்தில், இவ்விடயத்தை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றதாக மணமகள் ஆவேசமுற்று, திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்திலிருந்து வெளியேறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் திருமண மண்டபத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments