Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் மீண்டும் வீழ்ச்சி!*

கடந்த இரண்டு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில் இன்று (06) தங்கத்தின் விலை சரிந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


24 கரட் தங்கமானது பவுண் ஒன்றுக்கு 3,17,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 1000 ரூபாவால் குறைந்து 3,16,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2,90,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,37,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலையானதி 39,525 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,625 ரூபாவாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments