2025 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த தொடர் அடுத்த வருடம் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக ஏற்பட்டாளர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
2025 LPL தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. எனினும், 2026 T20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தவிருப்பதால் அதற்காக மைதானங்களை தயார் செய்வது மற்றும் ஏற்பாடுகளுக்காக LPL தொடரை ஒத்தி வைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்தது.
இதேநேரம், அடுத்த பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு, தம்புள்ளை, காலி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 05 அணிகளே போட்டியிடவுள்ளன. இத்தொடரின் 06 வது பருவத்திற்கான உத்தியோகபூர்வ வர்த்தகத் தூதுவராக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் நியமிக்கப்படவுள்ளார்.

0 Comments