டைனமைட் மருந்து அடங்கிய இரு கட்டுக்களை தமது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (14) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா - பூவரசன்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞன், 33 வயது குடும்பஸ்தருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.
கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற, இரகசியத் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 Comments