2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான GCE (O/L) பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26 வரையும்,
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் 09 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
2026 GCE (A/L) பரீட்சைகள் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரையும்,
2026 ஆம் ஆண்டுக்கான GCE (O/L) பரீட்சைகள் 2026 டிசம்பர் 08 முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையும் இடம்பெறுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


0 Comments