Ticker

10/recent/ticker-posts

IPL 2026: ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி அறிவிப்பு.

IPL 2026 தொடருக்கான மினி ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி பற்றிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி IPL மினி ஏலம் 2025 டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரின் 19 ஆம் பதிப்பு அடுத்த வருடம் இடம் பெறவுள்ளது. இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெறவுள்ளமை குறிப்பிட த்தாக்கது.

இந்நிலையில், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைய தினத்துக்குள் 10 அணிகளும், IPL நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலமாக வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகின்றது.

இதில் சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் ஆகியோரை இரண்டு அணிகளும் பரிமாற்றிக் கொள்ளும் விடயம் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இரண்டு அணிகளும் குறித்த இரண்டு வீரர்களையும் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் கண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மினி ஏலம் நடைபெறும் திகதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மினி ஏலம் 2025 டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments