Ticker

10/recent/ticker-posts

CSK அணியிலிருந்து நீக்கப்படுவாரா பத்திரன?

 19 வது IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் 2025 டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடக்கிறது.

இதற்கென தக்க வைக்கப்படும் வீரர்கள், வெளியேற்றப்படும் வீரர்கள் மற்றும் பரிமாற்ற முறை வீரர்கள் விவரத்தை இன்று (14) மாலைக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிலிருந்து சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல CSK அணியிலிருந்து ஜடேஜா, சாம்கரண் ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இடம் மாறியுள்ளனர். இதற்கு இரண்டு அணி நிர்வாகிகளும் ஒப்புக் கொண்டனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்று காலை வெளியானது.

10 அணிகளும் 32 வீரர்களை விடுவிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் CSK அணியிலிருந்து கான்வே, ரச்சின் ரவீந்திரா நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மினி ஏலத்தில் பங்கு பெறவுள்ளனர்.

மேலும் விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகா் கோட்டி ஆகியோரையும் விடுவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக பத்திரனவை விடுவிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளமை ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை மினி ஏலத்தில் மிகவும் மலிவான விலையில் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.


Post a Comment

0 Comments