தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர (62) திடீர் சுகவீனம் காரணமாகக் காலமானார்.
நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவர், முந்திய காலங்களில் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளதோடு, அவர் அமைச்சுச் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பல அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகள் உட்பட பல பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments