Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) பரீட்சை ஒத்திவைப்பு.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமையின் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சை 02 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

இதன்படி, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரண்டு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என்று அவர் தெரிவித்தார்.

புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments