Ticker

10/recent/ticker-posts

ஆண்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV தொற்று: பாடத்திட்டத்தில் இணைப்பத ற்கு முன்மொழிவு.

தேசிய பாலியல் நோய் / எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட HIV தொற்றுகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் - ஜூன் வரையான காலப்பகுதியில் மட்டும் 200 புதிய HIV தொற்றுகள் பதிவாகியுள்ளன. 

2025 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வருடம் இதுவரை, HIV தொற்று காரணமாக 23 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 2024 இல், 47 பேர் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

 2009 முதல், இலங்கையில் மொத்தம் 6,759 HIV நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் 5,366 ஆண்கள் மற்றும் 1,573 பெண்கள் அடங்குவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 இந்த போக்கானது அதிகரித்து வருவதனால் தேசிய பாலியல் நோய் / எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம், ஆணுறைகளின் பயன்பாடு, முன்னெச்சரிக்கை மருந்துகள், சம்பவத்திற்குப் பின்னரான தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட HIV தடுப்பு கல்வியைப் பாடசாலை பாடத்திட்டங்களில் இணைப்பதற்கு முன்மொழிந்துள்ளது. 

எனினும், குறித்த முன்மொழிவு இன்னும் ஆய்விற்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



Post a Comment

0 Comments