Ticker

10/recent/ticker-posts

08 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் – ட்ரம்ப் தெரிவிப்பு.

"இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் போர் உட்பட 08 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 08 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை” என்று அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வெனிசுலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும். நாங்கள் நிலத்திலும் அத்தாக்குதலை தொடங்க போகின்றோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது.

கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். போதைப் பொருட்களை எமது நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.

ஒரு போரினை முடிவுக்கு கொண்டு வரும் போது ஒவ்வொரு முறையும், 'அப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நான் இந்தியா - பாகிஸ்தான் உட்பட 08 போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர், எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

இப்போது அவர்கள், 'ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டு வந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கின்றனர்.

நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைவு கூர்ந்து பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால், எனக்கு அது தேவையில்லை; நான் பேராசைப்பட விரும்பவில்லை என்று அவர் கூறினார்.


Post a Comment

0 Comments