Ticker

10/recent/ticker-posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தாழமுக்கமானது காங்கேசன் துறையிலிருந்து சுமார் 300 KM வட கிழக்கே வடக்கு அகலாங்கு 12.3°N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6°E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

குறித்த அமைப்பு மேலும் நாட்டிலிருந்து விலகி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் வலுவிழக்கும் என்று இந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

வடக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பொழியக் கூடும். 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 2.00 PM மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments