Ticker

10/recent/ticker-posts

பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியினர் வகுத்த திட்டம்! பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சியினர் பாரியளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, ராவல்பிண்டியில் இன்று (3) வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, இவர் ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இம்ரான்கானை சந்திப்பதற்கு அவருடைய குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பாக்கிஸ்தானில் செய்தி பரவியது.

இதனால் அவருடைய கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அனைத்து வகையான கூட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையிலுள்ள இம்ரான் கானை இன்று (03) அவருடைய சகோதரி உஸ்மா மற்றும் ஒரு வக்கீல் மாத்திரம் சந்திப்பதற்கு சிறைச்சாலை துறையினாரால் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

0 Comments