அரை நூற்றாண்டு கால கல்விப் பாரம்பரியம் கொண்ட கிண்ணியா சுமையா மகளிர் அரபுக் கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகள் அனுமதி நிகழ்வு நேற்று (15) கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி, இதுவரை நூற்றுக்கணக்கான மௌலவியாக்களையும் பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ள கல்வி நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. திக்ர், ஐவேளை தொழுகை மற்றும் குர்ஆன் – ஹதீஸ் ஒலிகளால் நிறைந்த ஆன்மீகச் சூழலில் மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 350 மாணவிகள் கல்வி பயிலும் நிலையில், 2026 கல்வியாண்டுக்காக புதிதாக 60 மாணவிகள் கல்லூரியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments