எம்மி விருது வென்ற உலகப்புகழ் பெற்ற மூத்த நடிகையான கேத்தரின் ஓ'ஹாரா தனது 71 வயதில் காலமானார். வெள்ளிக்கிழமை (30) லொஸ் ஏஞ்சல்ஸில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து, மரணத்திற்கான காரணம் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன. இது குறித்துப் பேசிய அவருடைய ஊடகப் பிரதிநிதிகள், "குறுகிய கால உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்திருந்தார்" என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவருக்கு என்ன நோய் இருந்தது என்பது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட அவர்கள் மறுத்து விட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


0 Comments