Ticker

10/recent/ticker-posts

தேநீர் பிரியர்களுக்கு நற்செய்தி ; விலைக்குறையும் பால் தேநீர்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டதையடுத்து, நாளை (ஜனவரி 16) முதல் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 16 முதல் இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவின் விலைகளைக் குறைப்பதாக வர்த்தக அமைச்சகம் அறிவித்ததை தொடர்ந்தே இந்த விலை திருத்தம் வந்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 Kg பால்மா பொதிகளின் விலை 125 ரூபாவாலும், 400 g பால்மா பொதிகளின் விலை 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட பால் பவுடர் விலைகளுக்கேற்ப, பால் டீ விலை குறைப்பு நாடு முழுவதும் செயற்படுத்தப்படுமென்று உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Post a Comment

0 Comments