Ticker

10/recent/ticker-posts

2026 ஆம் ஆண்டில் தரம் 01 கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல்.

 2026 ஆம் ஆண்டு தரம் 01 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கின்ற பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தரம் 01 பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மேலதிகமாகத் தேவைப்படுகின்ற பயிற்சிகளை 2026.05.16 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.





மேலும், தரம் 1 இன் முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் காணப்படின், எதிர்வரும் இரண்டாம் தவணையில் அந்தப் பாடப்பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

Post a Comment

0 Comments