இந்தியத் துணை ஜனாதிபதியான சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 தொடக்கம் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே சமீபத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராஜ தந்திர சந்திப்புகளின் தொடர்ச்சியாக துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளதுடன், பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்தியத் துணை ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன் அரசியல் மற்றும் சில சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
டிட்வா புயலினால் பாதிப்படைந்தோரின் புனர்வாழ்வு & அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான திட்டங்கள் உட்பட, ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, இரண்டு நாடுகளுக்குமிடையேயான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த விஜயத்தின் போது பரிமாறிக் கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுடன் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழுவும் இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments