Ticker

10/recent/ticker-posts

தென்னம் படல் மறைப்பு: தீராத அத்தர் வாசம்.

'தென்னம் படல் மறைப்பு' நூலில் நபீலின் அத்தர் பற்றிய அத்தியாயம் மிக மிகவும் வாசமானது. சுறுமாவிலிருந்து அதனுடைய குளிர்ச்சியிலிருந்து தொடங்குவார் நபீல் அந்த எழுத்தை அந்த அத்தியாயத்தை. சந்தன ஊதுபத்திகளை வாசனையாகப் பரத்தும் எழுத்து.  








நபீலின் தந்தையின் வியாபாரம் அத்தர். சந்தனம், சுறுமா, பன்னீர், ஊதுபத்திகள், சாம்பிராணி மணக்க மணக்க நிலவிய அன்றைய நமது வீடுகள் அந்த வீடுகளின் அழகுகள் ஞாபகத்தில் வந்து போகும்.

அத்தர் போத்தில்களது சாயல் பற்றி அவர் விவரிப்பார். உருண்டையாய், சதுரமாய், சப்பட்டையாய், குள்ளமாய் பலவிதமான போத்தில்கள் உள்ளத்துக்குள் ஆடும். வீசவே மனம் வராத அத்தர் போத்தில்கள் அவை நமக்கும்.

மஞ்சள் மெழுகு பூசி அத்தர் போத்தில்கள் அங்கும் இங்கும் ஊர் ஊராய் பாதுகாப்பாய் நடைபயிலுமாம், போக்குவரத்து செய்யுமாம்.

ஆற்றுப் படுக்கைகளில் நிற்கும் கிண்ணம் மரங்கள் அம்மரத்தின் கிண்ணஞ்சிட்டு என்று அழைக்கப்படும் வேர்கள் கொத்து கொத்தாக சிலிர்த்து இருக்கிற காட்சிகளை அவர் விபரிப்பார். கிண்ணம் மரத்துக்கு கூனிப் பெத்தா உவமையும் பேரழகு.

அத்தர் தீர்ந்த பின்னும் போத்தில்களில் நிலவுகிற முடியாத வாசம்போல அந்த எழுத்து நிலைக்கிறது. அன்பின் நீண்ட வெளியாக இருந்த தன் வாப்பா பற்றி அவர் சொல்லி முடிப்பார் அந்த அத்தியாயத்தை.

 


ஒளி படிந்த அத்தர் நீரோடையில் காட்டுப் பூக்களின் வாசங்கள் தனது வாப்பாவின் உருவத்தை நினைவுகளை அவருக்குள் கொண்டு வருவதாக.. கண்ணீர் கொண்டு வரும் எழுத்து..


கெக்கிறாவ ஸுலைஹா

Post a Comment

0 Comments