கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் (Colombo Central Bus Terminal) மேற்கொள்ளப்பட்ட நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் முதலாம் கட்டத்தின் இறுதித் தருவாயில் இந்த திட்டம் Clean Sri Lanka programme இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மக்களுக்கு அதிக வசதிகளுடன் சுத்தமான மற்றும் நவீன போக்குவரத்து சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட முன்னெடுப்பு:
▪ தற்போது காணப்படும் கட்டடத்தை நவீன மயப்படுத்தல்
▪ புதிய தகவல் மத்திய நிலையம் (Information center)
▪ சுகாதார வசதிகளை விருத்தி செய்தல்.
▪ பஸ்கள் வெளியேறும் வரிசை / பிரதேசம் ஒன்றை தயாரித்தல்.
▪ சூழலை அழகு படுத்துதல்
ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் சிங்கள தமிழ் புது வருடத்திற்கு முன்னர் (Sinhala and Hindu New Year), மக்களுக்கு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வசதிகளை கையளிப்பதற்கு தயாராகி உள்ளத்துடன், இலங்கை போக்குவரத்து சபையால் சேவைகளை மேலும் நவீன மயப்படுத்தி மக்களுக்கு சிறந்த தரமான சேவையை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments