Ticker

10/recent/ticker-posts

அமெரிக்கா முன்வைத்தது நியாயமற்ற கோரிக்கைகள்" - ஈரான் தெரிவிப்பு

 நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன என்று அமைதிப் பேச்சுவார்த்தை எட்டப்படாமை குறித்து ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இடைக்காலப் போர் நிறுத்தம் கடந்த 07ஆம் திகதி முதல் ஆரம்பமானது. இந்நிலையில், நிரந்தரப் போர் நிறுத்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது. 

இதன்படி, நேற்று (11) அமெரிக்காவின் துணை ஜனாதிபதி J.D. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது.

21 மணித்தியாலம் நீடித்த குறித்த பேச்சுவார்த்தை இறுதியில் உடன்பாட்டை எட்டவில்லை. 

இது தொடர்பில், “ஈரான் மக்களின் தேசிய நலனை கருத்திற் கொண்டு ஈரான் பிரதிநிதிகள் தொடர்ந்து 21 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன" என்று கூறியுள்ளது.



Post a Comment

0 Comments