Ticker

10/recent/ticker-posts

விடுதலையான பேரறிவாளன் சட்டத்தரணியாக பதிவு.

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன் நேற்று (27) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாகப் பதிவு செய்து கொண்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த காலத்தில், பேரறிவாளன் இளமானி, முதுமானி உள்ளிட்ட பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்தார்.

உயர்நீதிமன்றத்தால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பின்பு, அவர் பெங்களூருவிலுள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து 03 ஆண்டு சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற சட்டத்தரணிகள் பதிவு செய்யும் நிகழ்வில், பேரறிவாளன் உட்பட மொத்தம் 1,248 பேர் சட்டத்தரணிகளாக பதிவு செய்து கொண்டனர்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும், புதிய சட்டத்தரணிகள் பதிவுக் குழுவின் தலைவருமான கே. பாலு குறித்த உறுதிமொழியை வாசித்தார். பேரறிவாளன் உள்ளிட்டோர் அதனை ஏற்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

இந்நிகழ்வில் சென்னை மேல் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.ஏ. தர்மாதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments