Ticker

10/recent/ticker-posts

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வரவுள்ளார்

 மாலைதீவு ஜனாதிபதி வைத்தியர் முகமது முய்சு எதிர்வரும் 2026 மே 03 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரவுள்ள அவர் மே 03 முதல் 05 வரை நாட்டில் தங்கியிருப்பாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவுள்ளார்.

பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், பணியாளர் பரிமாற்றத் திட்டங்களைச் செயற்படுத்துதல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி நடத்துதல் தொடர்பாக மாலைத்தீவு குடியரசின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சிற்கும் இலங்கையின் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்,

மாலைத்தீவு குடியரசின் சுகாதாரம், குடும்பம் மற்றும் நல்வாழ்வு அமைச்சுக்கும், இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குமிடையேயான கல்விசார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்,

மாலைதீவு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையேயான சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தாக்கது.


Post a Comment

0 Comments