Ticker

10/recent/ticker-posts

மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை உடன்படிக்கையை எட்டாத நிலையில் குறித்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் முற்றுகையிடப் போவதாக அறிவித்தமை இவ்விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் விலை 104.5 டொலராகவும், ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 102.8 டொலராகவும் அதிகரித்துள்ளது.



Post a Comment

0 Comments