அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 2026 ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபைத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோசடியான முறையில் நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அந்த நிதியை அறவிடுவதற்கும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஆய்வுகள் மற்றும் தரவுச் சரிபார்ப்புகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த பின்னர், தகுதியுடைய பயனாளிகளுக்கு 2026 ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments