நாட்டின் அனைத்து முன்பள்ளிகளும் 2026 ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலத்தில் முன்பள்ளியொன்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் அதனைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.
முன்பள்ளி கல்விக்கான வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

0 Comments