இலங்கையில் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட புதிய விலைகளின் விபரம் பின்வருமாறு:
பெற்றோல் 92 ஒக்டேன்: 01 லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 410.00 ரூபாய் ஆகும்.
பெற்றோல் 95 ஒக்டேன் (யூரோ 4): 01 லீற்றரின் விலையானது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 470.00 ரூபாய் ஆகும்.
ஓட்டோ டீசல்: 01 லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, இதன் புதிய விலை 392.00 ரூபாய் ஆகும்.
சூப்பர் டீசல் (4 ஸ்டார்): 01 லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 458.00 ரூபாய் ஆகும்.
மண்ணெண்ணெய்: 01 லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 265.00 ரூபாய் ஆகும்.
இன்று நள்ளிரவு 12.00 AM மணி முதல் குறித்த விலை மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments