Ticker

10/recent/ticker-posts

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் - ஜூலை 1 முதல் அமுல்படுத்த நடவடிக்கை

ஆண்டு தோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துமாறு கோரி, தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

இக்கோரிக்கையை நேற்று புதன் கிழமை (24) எழுத்துபூர்வமாக கையளித்ததாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினுடைய தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

இதன்படி, அடுத்த 05 நாட்களுக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

''ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தம் 05 ஆம் திகதி செயற்படுத்தப்படும் என்று நாங்கள் முன்னதாக அறிவித்திருந்தோம். இம்மாத இறுதியில் வரவிருக்கும் எரிபொருள் விலை மாற்றத்தை பரிசீலித்த பின்னர், எங்களுடைய அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, பஸ் கட்டணத்தை வழக்கம் போல் ஜூலை 01 ஆம் திகதி திருத்தியமைக்க நேற்று எழுத்துபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முடிவு செய்தோம். மேலும், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடனும் இந்த 05 நாட்களுக்குள் கலந்துரையாட முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் எங்களுடைய அனைத்து விலை விபரங்களையும் தெரிவித்து விட்டோம். இருப்பினும், ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.''


Post a Comment

0 Comments