Ticker

10/recent/ticker-posts

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு: நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவு

 2026 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சையை 02 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (23) தள்ளுபடி செய்துள்ளது.

மனு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் மற்றும் இரண்டாம் தடவையாக 2026 ஆம் ஆண்டு GCE (A/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


Post a Comment

0 Comments