Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது.

உயிர்த்த  ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



இதேவேளை, உயிர்த்த  ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 100 ஆண், பெண் சந்தேக நபர்களுக்கு எதிராக 14 வழக்குகளில் உயர் நீதிமன்றில் சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.



இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர், சனல் - 4 அலைவரிசை வெளிப்படுத்திய உண்மைகள் மற்றும் அதற்கு வெளியில் முன்வைக்கும் உண்மைத் தன்மைகளின் அடிப்படையில் விசாரணைகள் நடாத்தப்படும் என்று தெரிவித்தார்.



புதிய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்ற  பின்னர் கட்டம் கட்டமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மைகளை கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்து விசாரணைகள் நடாத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில், சிவில் சாட்சிகள், 07 இராணுவத்தினர், 24 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 03 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments