வெளிநாட்டிலுள்ள கணவருடன் நகைச்சுவையாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போன்று பாசாங்கு செய்த மனைவி நிஜமாகவே உயிரிழந்துள்ள சம்பவம் இலங்கையில் நிகழ்ந்துள்ளது.
அங்கொட - கொடல்ல மாவத்தையில் வசித்து வந்த 28 வயது நிறைந்த அனுத்தரா சிறிமான்ன என்ற பெண் ஒருவரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
அனுத்தராவுக்கு திருமணமாகி 03 வருடங்கள் கடந்த நிலையில், அவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதோடு, கணவர் உதவியுடன் வீட்டின் பின்புறம் மற்றுமொரு அழகான வீட்டையும் இவர் கட்டியுள்ளார்.
புது வீட்டின் புதுமனை புகுவிழா எதிர்வரும் 2025 ஜனவரி 19 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கடந்த 04 ஆம் திகதி, குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசி வாயிலாக வீடியோ அழைப்பை ஏற்படுத்தி, தனது அறையிலுள்ள படுக்கையில் கதிரையை வைத்து, அதன் மேல் ஏறி, மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை கழுத்தில் போட்டு, போலியாக தற்கொலை செய்ய முயன்றுள்ளார். தற்செயலாக எதிர்பாராத விதமாக கதிரை கவிழ்ந்ததில் அவருடைய கழுத்து இருகிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தில் 04 மகள்களில் இளையவரான இவர், தான் வசிக்கும் கிராமத்திலுள்ள அனைவருடைய மனதையும் கவர்ந்த குணம் கொண்ட அனுத்தரா ஹிம்புட்டானாவிலுள்ள முன்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். குறித்த பெண்ணின் உடல் அவருடைய புதிதாக கட்டப்பட்டிள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு ,இறுதிக் கிரியைகள் நாளை (08) மாலை உடுமுல்லை மயானத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments