Ticker

6/recent/ticker-posts

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

எனினும், இது தொடர்பான விசாரனைகள், ஏனைய சட்ட நடவடிக்கைகளையடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (08) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த பணிகள் எதிர்வரும்  ஜனவரி 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் 40 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் தெரிவித்துள்ளார்.

TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x



Post a Comment

0 Comments