Ticker

6/recent/ticker-posts

இலங்கை வருகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியப் பிரதமர் மோடி இந்த ஆண்டிற்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த திகதிகள் இன்னும் இரு தரப்பிலிருந்தும் முடிவாகவில்லை. இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா என்பவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்:  "பிரதமர் மோடியின் இலங்கை பயணத்துக்கான திகதி குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

கடந்த மாதம் 02 நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவிற்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் மோடி அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 02 இருமுறை உத்தியோகபூர்வ இலங்கைக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர், 10 வருடங்கள் கழித்து மீண்டும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி. 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க விரைவில் சீனாவுக்கு சுற்றுப் பயணமொன்றையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments