கிண்ணியா பிரதேசத்தில் உள்ள உணவகங்களில் சுகாதார துறையினர் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் கிண்ணியாவில் சுட்ட கோழி (BBQ) சாப்பிட்ட 18 க்கும் மேற்பட்ட நபர்கள் உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைவாக இந்த தீவிர சோதனை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
கிண்ணியா பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் எ.எம்.எம்.அஜித் அவர்களின் தலைமையில் உணவகங்கள் விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்களை வைத்திருந்தவர்கள், சுகாதார நடைமுறையை பின்பற்றாதவர்களுக்கு எதிராக 20 குற்றச்சாட்டுக்களின் கீழ் 12 வர்த்தகர்களுக்கு வழக்கு தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரண்டு உணவகங்கள் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தேர்ச்சையாக ஏனைய உணவகங்கள், வர்த்தக நிலையங்களும் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments