Ticker

10/recent/ticker-posts

ஹோட்டல் உணவுகள் வீட்டு உணவை விட ஏன் சுவையாக இருக்கிறது?

ஹோட்டல்களில் ஃப்ரைட் ரைசாகட்டும்,, கொத்து உணவாகட்டும், இவைகளைத் தயாரிக்கும் போது பல கலவைகளும் குப்பிகளிலிருந்து பல வகை திரவங்களும் சேர்க்கப்படுகின்றன.

இவை  உணவு சுவையாக இருப்பதற்கான செயற்கை சுவையூட்டிகள். இதே போன்று கோழியை நெருப்பில் சுடும் போது பெயிண்ட் அடிக்கின்ற பிரஸ்ஸினால் (Brush) ஏதோ தடவப்படுகிறது. இவற்றால் மனிதனுக்கு ஏதும் பாதிப்புகள் இருக்குமா? என்பதை யாரும் சிந்திப்பதுமில்லை சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்பதும் இல்லை. நமக்கு உணவு சுவையாக இருக்க வேண்டும்.

'அஜினமோட்டோ' எனும் இரசாயன செயற்கை சுவையூட்டி மனித உடலுக்கு உகந்ததல்ல என்று அறிவிக்கப்பட்டும் இன்று கடைகளில் மூட்டைக் கணக்கில் விற்கப்படுகிறது. அதனை கிலோ கணக்கில் வாங்கி அனேகமான உணவுப் பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறான சேர்க்கைகளால்தான் வீட்டு உணவை விட ஹோட்டல் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கின்றன.

எனவே, உணவில் சுத்தம், அது தயாரிக்கும் இடத்தில் பாத்திரங்களில் சுத்தம், தயாரிப்பவரில் சுத்தம் என எல்லாவற்றையும் பார்ப்பது மட்டுமல்லாமல் உணவு தயாரிக்கும் போது உணவில்  மனிதனுக்குக் கேடான ஏதும் சேர்க்கைகள் உண்டா? என்பதையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

ஜவ்ஹர் ஹனீபா
கிண்ணியா

Post a Comment

0 Comments