சந்தையில் தக்காளியின் விலை வேகமாக சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
01 Kg தக்காளியை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வர்த்தகர்கள் வாங்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெலிமடை, எல்ல, எடம்பிட்டி, நெலுவ, ஹாலி எல, பண்டாரவளை உள்ளிட்ட பல்ளேறு பகுதிகளில் தற்போது தக்காளி அறுவடை நடந்து வருகின்றது.
இருப்பினும், கடந்த காலங்களில் 01 Kg தக்காளி 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments