முகப்பரு பிரச்சினைக்கு தேன் மற்றும் நெய்யை எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கின்ற சருமப்பிரச்சனைகளில் ஒன்றுதான் முகப்பரு ஆகும். இதற்கு பல வீட்டு வைத்தியங்களை நாம் முயற்சித்தாலும், நிரந்தரத் தீர்வு என்பது இல்லாமல் இருக்கும். ஆனால், நெய் முகப்பருவிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
நெய் ஏன் சிறந்த தீர்வு?
நெய் சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியம் மற்றும் அழகு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
நெய்யில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவையாகவும் காணப்படுகின்றது.
வைட்டமின் - ஈ சருமத்தினை புத்துணச்சியுடன் வைக்கின்றது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்திலுள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதற்கு உதவுகின்றது. ஏனெனில், முகப்பரு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பாக்டீரியா தொற்று ஆகும்.
நெய் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயற்பட்டு, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றது. இது வறண்ட சருமத்தால் ஏற்படுகின்ற எரிச்சலைக் குறைத்து, முகப்பரு தழும்புகளைக் குறைக்க கூடும்.
0 Comments