எரிபொருளின் விலையை மேலும் குறைப்பதற்காக புதிய முறையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள்
இதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரி பாகங்களின் விலை மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலமாக செலவுகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, செலவு மேலாண்மைத் திட்டத்தை செயற்படுத்த அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நடவடிக்கையானது எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் பலன்கள் நுகர்வோருக்குக் வழங்கப்படுமென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments