இரத்தினபுரி மாவட்டம் எஹெலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உடகஹகம, எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஆவார்.
எஹெலியகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1065.5 லீட்டர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments