டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் மீது அவகுடைய தந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
ராதிகா யாதவ்வின் தந்தையே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அந்த நாட்டின் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ராதிகா யாதவ்வின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
ராதிகா யாதவ் சமீப காலங்களாக இன்ஸ்டா கிராம் (Instagram) ரீல்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
அவருடைய தந்தைக்கு குறித்த விடயத்தில் உடன்பாடில்லை என்றும், தொடர்ந்தும் தந்தையின் சொல்லைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக ராதிகா யாதவுக்கும், அவருடைய தந்தைக்குமிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதில் கோபமடைந்த அவருடைய தந்தை ராதிகா யாதவை நோக்கி 05 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த ராதிகா யாதவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Comments