இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரான அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த மேற்படி மனுவின் பிரதிவாதிகளாகஇ ஜனாதிபதிஇ பிரதமர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலமாக இலங்கை மக்களின் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும்இ இது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படாமல் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
0 Comments