Ticker

10/recent/ticker-posts

அரச வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

அரசாங்க சேவை ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்காக தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இப்பதவிக்கான விண்ணப்பம், இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.parliament.lk இல் ‘Appointment of a Member to the Public Service Commission’ எனும் துரித இணைப்பு (Quick Link) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள வடிவத்திற்கு ஏற்ப தயார் செய்யப்படுதல் வேண்டும்.

அத்தோடு, தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஆகஸ்ட் 01 ஆம் திகதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள்

இதேவேளை, விண்ணப்பங்கள், அரசியலமைப்புச் சபையின் செயற்குழு செயலாளர் பொறுப்பதிகாரிக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள அரசியலமைப்புச் சபையின் அலுவலக முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலமாக அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

மேலும் . அஞ்சல் அனுப்பும் போது உறையின் இடது மேல் மூலையில், அல்லது மின்னஞ்சலில், “Appointment of a Member to the Public Service Commission” என்ற விடயத்தையும் குறிப்பிடப்படுதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Post a Comment

0 Comments