Ticker

10/recent/ticker-posts

கருணாநிதியின் மூத்த மகன் மரணம்.

 தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து என்பவர் உடல்நலக் குறைவால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருணாநிதி - பத்மாவதி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் முத்து. தனது 77 வது வயதில் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (19) காலமானார்.

1970 களில் தமிழ்திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மு.க.முத்து, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு, சமையல்காரன் போன்ற பாடங்களில் நடித்தார்.

நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் தனது சொந்த குரலில் சிறந்த பாடல்களையும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments