இலங்கையின் கனவுகள் நகரம் என்ற 'சிட்டி ஒப் ட்ரீம்ஸ்' (City of Dreams) விருந்தகத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்காக பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
2025 ஆகஸ்ட் 02 ஆம் திகதி அவர் இலங்கை வருகை தரவுள்ளார். முன்னதாக இந்நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவருடைய பயணம் எதிர்பாராத வகையில் இரத்துச்செய்யப்பட்டது.
இதனையடுத்தே, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments