Ticker

10/recent/ticker-posts

20 வயதில் பெரும் கோடீஸ்வரர். ஒற்றை முடிவால் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை

 சாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் சில தொழில் முயற்சிகளை முன்னெடுத்து, அதில் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் அமெரிக்காவுக்கு சென்றவர் தனது 20 வயதுகளிலேயே பெரும் கோடீஸ்வரராக மாறினார். வேலைஇ வருவாய் என்று அமெரிக்காவில் கனவு வாழ்க்கை வாழ்ந்த இவர் அப்போது 40 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பு கொண்ட MicroStrategy என்ற நிறுவனத்தில் பணியாற்றினார். 


ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில் கணினி உலகம் பெரும் ஆட்டம் காணத் தொடங்கியதையடுத்து வேலை, வருவாய் என்று மொத்தமும் இழந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு வெறும் 30,000 டொலர் தொகையுடன் வேறு வழியின்றி இந்தியாவுக்கு திரும்பினார்.

அவர் தான் பின்னர் Shaadi.com என்ற நிறுவனத்தை ஆரம்பித்துஇ மீண்டும் சாதித்தவரான அனுபம் மிட்டல். Shaadi.com நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 2,500 கோடி என்றே கூறப்படுகின்றது. உலகில் மிகப்பெரிய மேட்ரிமோனியல் இணையதளங்களில் ஒன்று Shaadi.com மட்டுமின்றி, உலக அளவில் 35 மில்லியன் பயனர்கள் இதில் உள்ளனர். இந்தியாவின் முதல் மேட்ரிமோனியல் இணையதளம் Shaadi.com ஆகும்.

அத்தோடு, 50 லட்சம் திருமணங்களும்Shaadi.com நிறுவனத்தால் நடந்துள்ளது. பொதுவாக தோல்வி கண்டு அஞ்சாத அனுபம் மிட்டல் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் எடுத்த ஒற்றை முடிவு அவரை மீண்டும் சாதனை புரிய வைத்துள்ளது. 

இந்தியா திரும்பும்போது தன்னிடம் எஞ்சிய 30,000 டொலர் தொகையில் 25,000 டொலரை செலவிட்டு இணையத்தள டொமைன் ஒன்றை வாங்கினார். மீதமிருக்கும் 5,000 டொலர் தொகையில் தொழிலை முன்னெடுக்கவும் இவர் முடிவு செய்தார். ஆனால், அந்த முடிவுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விமர்சகர்கள் அவரைப் பொறுப்பற்றவர் என்றனர். தம்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக குறிப்பிட்ட அனுபம் மிட்டல், பணமல்ல தம்மால் மீண்டுவர முடியும் என்பதை நிரூபிக்கவே இம்முயற்சி என்றார்.

Shaadi.com பெரும் வெற்றியை எட்டியது. மில்லியன் கணக்கானோர் இதில் பயனர்களாகினர். இன்று அனுபம் மிட்டலின் சொத்து மதிப்பு ரூ 185 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments